ரியோ தி ஜெனிரோ, டிச.20 (டி.என்.எஸ்) பிரேசில் நாட்டின் ஜெட் போர் விமானங்களுக்கான 4.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை சுவீடன் நாட்டின் சாப் நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனமும், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனமும் இந்தப் போட்டியில் முன் நின்றன. பிரெஞ்ச் அதிபர் ஹாலந்து பிரான்க்காய்ஸ் சென்ற வாரம் பிரேசில் சென்றிருந்தபோது தனிப்பட்ட முறையில் தங்கள் நாட்டு நிறுவனத்திற்கான பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனமே இந்த வாய்ப்பைப் பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பிரேசில் பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. பிரேசிலின் அதிபர் வில்மா ரூசோவின் விருப்பமும் போயிங் நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா மற்ற நாடுகளை உளவு பார்த்தது எட்வர்ட் ஸ்னோடென் மூலம் வெளிவந்தபோது பிரான்ஸ் நாடும் அதில் சிக்கியது தெரியவந்தது.
இதனால் கடந்த அக்டோபர் மாதம் அதிபர் வில்மா ரூசோவின் வாஷிங்டன் பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் இதில் ஏற்பட்ட மோதல்கள் போயிங் நிறுவனத்திற்குப் பாதகமாக முடிந்தது. ஏற்கனவே தென் கொரியாவின் ஒப்பந்தமும் போயிங்கிடமிருந்து கை நழுவியது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
தொழில்நுட்ப பரிமாற்றம், செலவுகள் மட்டுமின்றி பராமரிப்பும் கருத்தில் கொள்ளப்பட்டதால் சாப் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக பிரேசிலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செல்சோ அமோரிம் இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தைப் பெற்றபின் சாப் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.