Thursday, December 19, 2013

கடன் பத்திரங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை ஜனவரியில் துவங்குகிறது

வாஷிங்டன்: அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் (மத்திய வங்கி) டாலர்களின் புழக்கத்தை படிப்படியாகக் குறைக்கும் (குவாண்டிடேடிவ் ஈஸிங்) திட்டத்தை அறிவித்தது. அமெரிக்காவின் பொருளாதாரம், மந்தநிலையில் இருந்து மீட்சி பெறுவதால், அமெரிக்க மத்திய வங்கி, தான் ஏற்கனவே வெளியிட்ட கடன் பத்திரங்களை படிப்படியாக திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த புதனன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொள்கை முடிவு குறித்து 2 நாள் கூட்டத்தில் விவாதம் நடக்கிறது. மாதந்தோறும் 8,500 கோடி டாலர் அளவுக்கு கடன் பத்திரங்களை திரும்பப் பெறப் போவதாக முன்பு அறிவித்து இருந்தது. தற்போது 7,500 கோடி டாலர் அளவுக்கு திரும்பப் பெறப் போவதாக தெரிவித்துள்ளது. 1,000 கோடி டாலர் அளவுக்கு குறைத்துள்ளது. அடமானப் பத்திரங்கள், கருவூலப் பத்திரங்கள் என்று சரிவிகிதமாக பிரித்து திரும்பப் பெறப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  அமெரிக்காவின் பொருளாதார நிலைமை, வேலைவாய்ப்பு சந்தை ஆகியவற்றில் வளர்ச்சி குறைவாக இருந்தபோதிலும், அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் சிறிது சிறிதாக வாபசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8,500 கோடி டாலர் மதிப்பீட்டிலான கடன் பத்திரங்களை திரும்ப பெறும் நடவடிக்கையை எதிர்பார்த்து உலகம் முழுவதும் நாடுகள் காத்திருந்தன. ஆனால், இதில் 1,000 கோடி டாலர் அளவுக்கு குறைத்து 7,500 கோடி டாலர் அளவுக்கு திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிட்ட அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக உள்ள ஜானெட் யெல்லென் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை இந்த வாரம் இறுதியில் உறுதி செய்து அங்கீகாரம் அளிக்கும் என்று தெரிகிறது. தற்போதைய தலைவர் பெர்னான்கேவின் பதவி காலம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. ஜானெட் யெல்லென் அண்மையில் அளித்த பேட்டியில், ‘‘கடன் பத்திரங்களை திரும்ப பெறும் நடவடிக்கை, படிப்படியாக திரும்பப் பெறப் படும் என்று கூறியிருந்தார். 

நிலைமையை இந்தியா சமாளிக்கும் மத்திய நிதியமைச்சர் உறுதி

புதுடெல்லி: அமெரிக்காவின் கடன் பத்திரங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையால் ஏற்படும் நிலைமையை இந்தியா திறம்பட சமாளிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நம்பிக்கையுடன் தெரிவித்தார். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் முடிவு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுடன் சிதம்பரம் நேற்று காலையில் பேசினார். கடந்த மே மாதம் இருந்த நிலையில் இருந்து தற்போது நன்றாக இருக்கிறோம். நிலைமையை சமாளிக்கும் விதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராஜன் தெரிவித்தாக சிதம்பரம் கூறினார்.

ரூபாய் மதிப்பு சரியாமல் காக்க...

ஜனவரியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ், டாலர்கள் புழக¢கத்தில் விடுவதை குறைக¢கத் தொடங்கினால் அது ரூபாயின் மதிப்பை வீழ்த்தாமல் தடுக¢கும் வகையில் 2 முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுத்தது. 
 
1. வங்கிகள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து டாலர் டெபாசிட்டுகளைத் திரட்டுவதற்கு ஊக¢கம் அளிக¢கும் திட்டம். இதன்படி, வங்கிகள் திரட்டும் டாலர்களைப் பெற்றுக¢கொண்டு ரூபாய்களை வங்கிகளுக¢கு ரிசர்வ் வங்கி வழங்கும். கரன்ஸி சந்தையில் ஏற்படக் கூடிய ரிஸ்க¢கை சமாளிக¢க வங்கிகள் குறைந்த அளவில் (3.5 சதவீதம்) கட்டணம் செலுத்தினால் போதும் என்ற சலுகை தரப்பட்டுள்ளது.
  
2. வங்கிகள், வெளிநாட்டிலிருந்து டாலர் கடன்களை வாங்கி அதை ரிசர்வ் வங்கியிடம் சலுகை கட்டண (ஸ்வேப்) முறையில் ரூபாயாக மாற்றிக்  கொள்ளும் திட்டம்.
 
இந்த 2 திட்டங்கள் மூலம் நவம்பர் 30ம் தேதி வரையில் 3,200 கோடி டாலர்களை இந்தியா திரட்டி உள்ளது.
அமெரிக்கா பெடரல் ரிசர்வ் முடிவு புதனன்று வெளியான பின்னர், நேற்று செலாவணி சந்தையில் டாலருடனான ரூபாயின் மதிப்பு 62.14 ஆக இருந்தது.

No comments: