Sunday, September 11, 2011

ஜா‌ன்பா‌ண்டி‌ய‌னை ‌விடு‌வி‌க்க‌க் கோ‌ரி பரம‌க்குடி‌, மதுரையி‌ல் ‌கலவ‌ர‌ம் - ‌து‌ப்பா‌க்‌‌கி சூ‌ட்டி‌ல் 3 பே‌ர் ப‌லி

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11-ல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் இம்மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பள்ளப்பசேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை சாதி வெறி கொண்ட கும்பல் 09.09.2011 இரவில் படுகொலை செய்துள்ளது. தலித் மக்களை ஒட்டு மொத்தமாக மிரட்டி அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்ட இந்த படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது.
இப்பதட்டமான நிலையில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் ஜான்பாண்டியனை கைது செய்திருப்பது காவல்துறையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையை காட்டுகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமடைந்து விரும்பபத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. பரமக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பைபாஸ் ரோடு சிந்தாமணியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிலர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய தவறான அணுகுமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன் .
இத்தகைய சம்பவங்களால் ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடுமாறும், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படிக்கு சீனி முஹம்மது சமுக ஆர்வலர்

No comments: